தமிழ்நாடு சிவன் கோயில்கள் - இருப்பிட விபரங்கள் ...
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றிதேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பெற்ற தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்பெற்றுள்ள 274 சிவஸ்தலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் (பாண்டிச்சேரி உட்பட) 264 சிவஸ்தலங்கள் உள்ளன. இந்த 264 கோவில்களிலும் 190 சிவஸ்தலங்கள் முன் காலத்தில் சோழ நாடு என்று குறிப்பிடப்படும் பகுதியான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் (Districts) அமைந்துள்ளன. இவை காவிரியின் வடகரையில் 63ம், காவிரியின் தென்கரையில் 127ம் ஆக 190 சிவஸ்தலங்கள். மற்ற 74 சிவஸ்தலங்களில் பாண்டிய நாட்டில் 14, கொங்கு நாட்டில் 7, தொண்டை நாட்டில் 31, நடு நாட்டில் 22 ஆக அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 264 சிவஸ்தலங்கள் போக மீதியுள்ள 10 சிவஸ்தலங்கள் இந்தியாவில் மற்ற இடங்களிலும், இலங்கையிலும் அமைந்துள்ளன.
கேரள மாநிலம் ( மலைநாடு ) - 1
ஆந்திரா மாநிலம் - ( தொண்டை நாட்டின் ஒரு பகுதி ) - 1
கர்நாடகா மாநிலம் ( துளுவநாடு ) - 1
இலங்கை ( ஈழநாடு ) - 2 மற்றும்
வட இந்தியா ( வடநாடு ) - ௫
காவிரி வடகரை ஸ்தலம்http://www.shivatemples.com/nofct/nofc.ஹ்த்ம்ல்
காவிரி தென்கரை ஸ்தலம்http://www.shivatemples.com/sofct/sofc.html
இதில் குத்தலாம் கோவில் குறிப்பிட பட்டுள்ளது.
பாண்டிய நாடுhttp://www.shivatemples.com/pnaadut/pnaadu.html
நடு நாடுhttp://www.shivatemples.com/nnaadut/nnaadu.html
தொண்டை நாடுhttp://www.shivatemples.com/tnaadut/tnaadu.html
கொங்கு நாடுhttp://www.shivatemples.com/knaadut/knaadu.ஹ்த்ம்ல்
இவை அனைத்தும் http://www.shivatemples.com/
என்கின்ற தலத்தில் இருந்து என் சொந்த குரிப்பிற்காக இங்கு கொடுத்துள்ளேன் .
அணைத்து தகவல்களும் http://www.shivatemples.com/ இற்கு சொந்தமானவை.